Wednesday, November 6, 2013

இடஒதுக்கீடு என்பது பள்ளருக்கான சலுகையா?

இடஒதுக்கீடு என்பது பள்ளருக்கான சலுகையா?
--------------------------------------------------------------------------------------------------
ஓ !!!
என்ன கொடுமை!. இடஒதுக்கீடு என்பது சலுகையா? இது மற்ற சாதிகளுக்கு மாதிரி பட்டியல் இனத்தில் உள்ளவருக்கும் உரிய உரிமைதானே? சலுகை என்பது கல்வி உதவித்தொகை என்று கொண்டாலும், தற்காலத்தில் எஃப்.சி தவிர மற்ற அனைத்து சாதியினருக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பட்டியல் இனத்தாருக்கு மட்டுந்தான் இடஒதுக்கீடும் மற்றும் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, காலங்காலமாக இந்த மாதிரி பொய்ப் பரப்புரையை சிலர் செய்வது, இந்த பட்டியல் இனமக்களை தாழ்ந்த மக்களாக போலியாகச் சித்தரிப்பதற்காகத்தான் அன்றி வேரில்லை. அப்படி இவர்களை சொன்னால்தானே தாங்கள் போலியாக உயர் சாதி என்ற போர்வையில் இந்த தமிழ் நாட்டில் ஏமாற்றிப் பிழைத்ததையும், பிழைப்பதையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். வெட்கம்.. வெட்கம். இப்போது எங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளிக் கொண்டு வந்து, எங்களை எஸ்.சி தவிர்த்த வேறு அடையாளத்தில் உங்களைப் போன்று எங்களுக்கான இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதுவும் இப்போது உள்ளது போன்றே இருக்கப் போகிறது. ஏனென்றால், இடஒதுக்கீடும், உதவித்தொகையும் அனைத்து சாதிக்கும் உள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? ஒரே மாற்றம் பட்டியல் இனத்தார் என்ற அடையாளம் இல்லாமல் வேறு ஒரு பெயர். அது எம்.பி.சி அல்லது பி.சி யாக இருக்கும். அவ்வளவுதான். இதுதானே இடஒதுக்கீடு மற்றும் சலுகைக்கான கணக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகை பற்றிய பொய்யை நீங்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? முந்தைய காலங்களில் பட்டியல் இனத்தார்களின் விகிதாசாரத்துக்கு உரிய இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப போதுமான படித்த மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், படித்த ஒரு சிலருக்கு [பெரும்பான்மை மக்கள் படிக்க மற்ற இனத்தார் போன்று வசதி இல்லாததால் அல்லது படிக்கவிடாமல் அடக்கப்பட்டதால்] மிக எளிதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்காலத்தில் நிலை அப்படி இல்லை. தற்காலத்தில் பட்டியல் இனத்தார் பெரும்பாலானவர் படிக்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால், மற்ற இனத்தாரை ஒப்பீடு செய்யும்போது உயர்கல்வியிலும் மற்றும் அரசு வேலை வாய்ப்பிலும் இவர்களில் நன்கு படித்த பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த நிதர்சனத்தை நாங்கள் புரிந்து தானே இருக்கிறோம். ஆனால், இது உங்களுக்கத்தானே புரியாமல் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்காக நாங்கள் சித்திக்க முடியுமா?
http://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu
CREDITZ: http://maruppukalam.blogspot.in/

வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது?




தேவேந்திர குல நன்பர்களே, நாம் அணைவரும் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகிறோம் ஆனால் பட்டியல் இனத்திலிருந்து வெளியேறினால் சலுகை பறிபோகும் என எண்ணும் நன்பர்கள். முன்நகர்வு போராட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட " வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? " என்ற நூலை படியுங்கள். அந்த நூல் நாம் பட்டியல் இனத்தில் இருப்பதால் நாம் அடையும் இழிவுகளையும். அதில் இருந்து வெளி வருவதால் நாம் அடையும் கௌரவத்தையும். தெளிவாக விளக்குகிறது. வண்ணரும்,நாசுவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டேர் பட்டியலில் இருந்து தைரியமாக எதிர்நீச்சல் போடும்போது நாம் ஏன் பட்டியலில் இருந்து வெளியேற யோசிக்க வேண்டும். இலவசமும்,சலுகையும் இல்லாமல் வாழ முடியாதா.

**
இலவசமும், சலுகையும் நமக்கு இழுக்கு. இழந்த ஆட்சி அதிகாரம் ஒன்றே நமது இலக்கு**

contact details:8608851205 , 8122795843 , 9788957048.